Breaking News
recent

செல்வ வளம் தரும் ஐஸ்வர்ய மஹாலட்சுமி


முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. அங்கு மூலவர் திருக்காமேஸ்வரர் உடன் அமர் சிவகாமசுந்தரியுடன்  பக்தர்களுக்கு அருளுகிறார். ஆலய பிரகாரத்தில் ஐஸ்வர்ய மகுடத்துடன் மஹாலட்சுமி அழகிய சிற்பமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  இத்தலத்தில் மஹாலட்சுமி செய்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஐஸ்வர்ய மகுடம் அளித்து வரம் அருளியதாக பக்தர்கள் கூறுகின்றனர். மூலவர் திருக்காமேஸ்வரரை அக்காலத்தில் மன்னர்கள் மட்டும் வணங்கி பேறு பெற்றதாகவும், போர் மற்றும் மன்னராக முடிசூட்டிக் கொள்ளும் முன்னதாக  தங்களுடைய மகுடம், ஆயுதங்கள் ஆகியவற்றை வைத்து வணங்கிய பின்பு தான் எந்த செயலையும் மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.  திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டதாகவும்  கூறப்படுகிறது. தற்போது ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் மிகுந்த பொருட் செலவில் நடைபெற்று வருகிறது. 
Unknown

Unknown

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.