Breaking News
recent

"பாவம் போக்கும் தீர்த்தவாரி தரிசனம்"குளித்தலை தைப்பூசம் திருநாள் 2K16








காவிரிக் கரையி்ல் எட்டூர் ஸ்வாமிகளின் அற்புத தரிசனம்...

திருச்சி பகுதியின் காவிரியின் தென்கரை மற்றும் வடகரையில் உள்ள எட்டு சிவத்தலங்களில் உள்ள ஸ்வாமிகள் அனைவரும் தத்தம் தேவியருடன் ஒரே இடத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு திருக்காட்சி தரும் வைபவம் தைப்பூசத் திருநாளில் நடைபெறும். காவிரியின் தென்கரையில் உள்ள கடம்பர்கோவில், பேட்டவாய்த்தலை, ராஜேந்திரம், ஐயர் மலை, கருப்பத்தூர் மற்றும் வடகரையில் உள்ள வெள்ளூர், முசிறி, திருஈங்கோய்மலை ஆகியவை தான் அந்த எட்டு புராதண தலங்கள்.

திருக்கடம்பத்துறை என்று புராணத்தில் போற்றப்படும் தலமான குளித்தலை கடம்பர்கோவில், முருகப்பெருமானின் சாபத்தை போக்கி சிவபெருமான் அருள்பாலித்த திருவிடம். திருமால், ஸ்ரீபிரம்மன், சப்தகன்னியர், கண்வ முனிவர், அகத்திய மாமுனி என பலரும் வழிபட்டு, வரம் பெற்ற பூமி எனப் பெருமைகள் கொண்ட இந்த திருத்தலத்தில், உத்தராயன புண்ணிய காலத்தில், தைப்பூச நாளில் ஸ்ரீகடம்பவனேஸ்வரருடன் சேர்த்து மற்ற ஏழு தலங்களின் சிவனாரும் தத்தம் தேவியருடன் காவிரிக் கரையி்ல் எழுந்தருள்வர்.

எட்டு ஆலயங்களின் உத்ஸவ மூர்த்தங்கள் சர்வலங்காரத்தில், சப்பரத்தில் வீதியுலா வருவார்கள். பிறகு, ஊர்வலமாக காவிரிக் கரைக்கு வந்து, அங்கே தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். முதல் நாள் இரவு அபிஷேக-ஆராதனைகளும் மறுநாள் சுவாமிகளின் திருச்சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி வைபவமும் நடைபெறும். எட்டூர் ஸ்வாமிகளையும் தீர்த்தவாரியில் தரிசிக்க மோட்சப் பதவியை, முக்தியை அடையலாம் என்கின்றனர் பக்தர்கள்!

காசியைப் போலவே சிவனார் வடக்கு நோக்கி அருளும், தட்சிணகாசி என்று போற்றப்படும் தலம் குளித்தலை கடம்பர்கோவில். காசிக்கு இணையான இந்தத் தலத்தில், கங்கைக்கு இணையான காவிரி கரையில், தைப்பூச நாளில், இறைவனை தரிசித்தால் பாவங்கள் நீங்கி, ஐஸ்வரிய பாக்கியம் பெற்று சிறப்புற வாழ்வர் என்பது ஐதீகம்.

(சக்தி விகடன் இதழில் வெளியான ''பாவம் போக்கும் தீர்த்தவாரி தரிசனம்" கட்டுரையில் இருந்து...)
SmartMGA

SmartMGA

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.