Breaking News
recent

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் --12ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
--


ஸ்ரீ ஹரி : சரணம் என்று பகவானையே நம்பிய ப்ரஹ்லாதன் என்கிற அந்தச் சிறிய குழந்தையின் வார்த்தைக்கு ஏற்ப , தூணிலிருந்து அவதரித்து,
அக்குழந்தையைக் காப்பாற்றினான். ஆசார்ய மஹா புருஷர்கள் எல்லாம்,இக்குழந்தையை ப்ரஹ்லாதாழ்வான் என்று போற்றுகிறார்கள் .
 

இந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரம் ஒரு நொடியில் நிகழ்ந்த அவதாரம்.
அனுக்ரஹம் செய்வதைத் தவிர வேறொன்றும் அறியாத பிராட்டிஸ்ரீ மஹாலக்ஷ்மியை அணைத்த திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கும்
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹன் ,பரிபூரண அனுக்ரஹ மூர்த்தி.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில், ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரகரணத்தில் இந்த ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் உள்ளது.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், எல்லாக் கோரிக்கைகளையும் அளிக்கவல்லது. இந்த ஸ்தோத்ரம் ''திவ்யம் '' எனப் புகழப்படுகிறது.
இது ''ஸர்வார்த்த ஸாதநம். ''
221வது ச்லோகம் இப்படிக் கூறுகிறது---


-- ஸர்வார்த்த ஸாதநம் திவ்யம் கிம் பூயஸ் ஸ்ரோது மிச்சஸி
இந்த ஸ்தோத்ரத்தில், நம்முடைய முக்கிய நியாயமான கார்யங்கள் நிறைவேற
 

அதற்கான ச்லோகங்களைப் பாராயணம் செய்தோமானால், அந்த ச்லோகங்கள்
அவ்வாறான பலனைத் தரும் சக்தி வாய்ந்தவை என்று நம்முடைய முன்னோர்கள்
அறுதியிட்டுக் கூறி இருக்கிறார்கள். முக்யமானவற்றைப் பார்ப்போம் ----


1. பயம் விலக -------

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச |
ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே ||

----39 வது ச்லோகம்

அல்லது

அமீ ஹி த்வா ஸுரஸங்கா விஸந்தி கேசித் பீதா : ப்ராஞ்ஜலையோ க்ருணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா முநயஸ் ஸித்தஸங்கா : ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி : புஷ்கலாபி ||
------85 வது ச்லோகம்

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா : விஸ்வே தேவா மருதஸ்சோஷ்மபாஸ்ச |
கந்தர்வ யக்ஷாஸுர ஸித்தஸங்கா : வீக்ஷந்தி த்வாம் விஸ்வமிதாஸ் சைவ ஸர்வே ||
--------86 வது ச்லோகம்

லேலிஹ்யஸே க்ரஸமாநஸ் ஸமந்தாத் லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி : |
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ் தவோக்ரா :ப்ரதபந்தி விஷ்ணோ ||
-----------87 வது ச்லோகம்


இந்த 3 சலோகங்களையும், காலையிலும் மாலையிலும் 10 தடவை ஜபம் செய்க.
அல்லது , ஒரு சிறிய செம்பு/வெள்ளிப் பாத்ரத்தில் சுத்தமான தீர்த்தம் சேர்த்து,வலது கை விரல்களால் ,பாத்ரத்தைத் தொட்டுக்கொண்டு, 10 தடவை ஜபித்து,
அதாவது மந்திரித்து, இந்தத் தீர்த்தத்தைச் சாப்பிட ,பயம் விரைவில் நீங்கும்.2. ஆரோக்யத்துடன் ,உறுதியாக உடல் விளங்க --------

ஓம் நமோ நாரஸிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரிணே |
வஜ்ர தேஹாய வஜ்ராய நமோ வஜ்ரநகாய ச ||
-----முதல் ச்லோகம்
தினமும் காலையில், 10 தடவையாவது பாராயணம் செய்க3. அபம்ருத்யு தோஷம் விலக--------

காலாந்தகாய கல்பாய கலநாய க்ருதே நம : |
காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே ||
-----20 வது ச்லோகம்
தினமும் காலையிலும், மாலையிலும் 10 தடவையாவது சொல்லவும்.தோஷம் விலகி , ஆயுள் வ்ருத்தியாகும்4. ஜ்வரம் ---வியாதிகள் --அபிசாரம் --சூன்யம் மறைய

ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகார்ய விதாயிநே |
ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரிணே ||
--------48 வது ச்லோகம்
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே |
பிங்காக்ஷாயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே ||
-----------49 வது ச்லோகம்

தினமும் காலையிலும் மாலையிலும் 10 தடவையாவது சொல்லி வரவும்


5. கண்கள் நன்கு ப்ரகாஸிக்க (நேத்ரம் நன்குதெரிய ---------

ஸுஜ்யோதிஸ்த்வம் பரம்ஜ்யோதி : ஆத்மஜ்யோ தி : ஸநாதந : ( 92வது ச்லோகம் பின்பாதி )
ஜ்யோதிர்லோகஸ்வரூபஸ் த்வம் ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி https://www.facebook.com/images/emoji.php/v6/fcb/1/16/1f641.png:(
93 வது முதல் பாதி )
தினமும் விடியற் காலையில், ஸ்ரீ ந்ருஸிம்ஹனைத் த்யாநித்துப் பத்து தடவையாவது சொல்லுங்கள்.


6. துஷ்ட க்ரஹங்களின் ஆபத்து விலக, பூத, ப்ரேத ,பிசாசங்கள் மறைந்தோட -----

சத்ருக்நாய ஹ்யவிக்நாய விக்னகோடி ஹராயச |
ரக்ஷோக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம : ||
---- 43 வது ச்லோகம்
பூதபாலாய பூதாய பூதாவாஸாய பூதிதே |
பூத வேதாள காதாய பூதாதிபதயே நம : ||
------44 வது ச்லோகம்
பூத க்ரஹ விநாசாய பூதஸம்யமிநே நம : |
மஹாபூதாய ப்ருகவே ஸர்வ பூதாத்மனே நம : ||

----------------45 வது ச்லோகம்
தினமும் காலையிலும் , மாலையிலும் ,ஒரு மண்டலம் ,
பத்து தடவை பாராயணம் செய்து வரின் எல்லா துஷ்ட க்ரஹ துன்பங்களும் பறந்தோடும்7. விவாஹம் விரைவில் நடைபெற -------

காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே |
-------------ச்லோகம் 143ன் பின்பாதி
நம : காமவிஹாராய காமரூப தராய ச |
----------------ச்லோகம் 144ன் முன்பாதி
இந்த ச்லோகத்தைத் தினமும் சொல்லி வர, விவாஹம் விரைவில் நடைபெறும்8. ஸுக பிரஸவத்துக்கு ------------------------

கவயே பத்ம கர்ப்பாய பூத கர்ப்ப க்ருணாநிதே |
ப்ரஹ்மகர்பாய கர்ப்பாய ப்ருஹத்கர்ப்பாய தூர்ஜடே ||
-------------- 108 வது ச்லோகம்
தினமும் 108 தரம் சொல்லி வர, ஸுக பிரஸவமாகும்9. ஸர்வாபீஷ்ட ஸித்திக்கு-------
 

தர்மநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே கருணாகர |
புண்ய நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தேபீஷ்ட தாயக ||
-------------167 வது ச்லோகம்
 

தினமும் காலையில் 10 தடவையாவது சொல்லவும்
ப்ரபஞ்ச ஸாரம் ----23 வது படலம் --ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரயோக விதானம்
சொல்கிறது. இது ஆதி சங்கர பகவத்பாதாள் அருளியதாகவும்,அவருடைய ப்ரதம சிஷ்யரான ஸ்ரீ கோவிந்த பகவத் பாதரால் ப்ரகாஸப்படுத்தப்பட்டது ,என்று சொல்லப்படுகிறது.
இதில் ,குறிப்பிடப்படும் மந்த்ரங்களை, தகுந்த ஆசார்யன் மூலமாக உபதேசமாகப் பெற்று, ஆவ்ருத்தி செய்ய வேண்டும். ஹோமம் முதலியவற்றைத் தகுந்த ஆசார்யன் மூலமாகச்செய்யவேண்டும். இவற்றில் சிறு பிழை ஏற்பட்டாலும், விபரீதபலன்களைக் கொடுக்கும். மிகுந்த நியமத்துடன் ,ஸர்வ ஜாக்ரதையாக
பக்தி, ச்ரத்தையுடன் செய்ய வேண்டும். இதையும் பார்ப்போம் ------SmartMGA

SmartMGA

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.