Breaking News
recent

அகத்தியர் அருளிய காயத்ரி மந்திரம்



சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் வரிசையில் "பிரம காயத்ரிமந்திரத்தினையும் அவற்றினைப் பயன்படும் வழிமுறைகளையும் காண்போம். இந்த தகவல் அகத்தியரின்அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
இனி அகத்தியர் அருளியபிரம காயத்ரிமந்திரத்தைப் பார்ப்போம்.
பாரப்பா அசபையிலேபிரம காயத்திரி
பரிவாக சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பேரப்பா ஓம் அங்உங் மகாலம்வம்நசிமசி
பிர்மதே வாயசுவாகா வென்றுஓது
சாரப்பா சுத்தவெள்ளை பிரகாசிக்கும்
சரசுவதி வார்த்தைசொல்வாள் கலைகெல்லாமே

பிரம காயத்ரி மந்திரம்
"ஓம் அங்உங் மகா லம்வம் நசிமசி
பிர்மதேவாய சுவாகா"

இந்த பிரம காயத்ரியை செபிப்பவர்களுக்கு சகல கலைகளில் தேர்ச்சியும் அட்டாங்க சித்தியும் கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.

இந்தக் காயத்ரி மந்திரங்களை எவ்வாறு செபிப்பது?
அதனையும் அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விவரித்திருக்கிறார்.
தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
திறமான ரகசியமா மந்திரந்தன்னை
ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
கூவிமன மசையாமல் மவுனமாக
கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே
இந்த இரகசிய காயத்ரி மந்திரங்களை தினமும் அந்தி சந்தி வேளைகளில் நூற்றியெட்டு தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு செபிக்க வேண்டும் என்கிறார்.  முக்கியமாக இந்த மந்திரங்களை உதடுகள் அசையாமல் உள்ளுக்குள் செபிக்க வேண்டும் என்கிறார்.

குறிப்பு :-  ஒரு மண்டலம் - 48 நாட்கள்.
SmartMGA

SmartMGA

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.